search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வினியோகம் பாதிப்பு"

    • வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும் துணை மின் நிலையம் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது.
    • நேற்று பகல் 2 மணி அளவில் திடீரென மின் பாதையிலும், மின் சாதனங்களிலும் பழுது ஏற்பட்டது. இதனால் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் முழுமையாக தடைப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும் துணை மின் நிலையம் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது.

    இப்பகுதியில் நேற்று பகல் 2 மணி அளவில் திடீரென மின் பாதையிலும், மின் சாதனங்களிலும் பழுது ஏற்பட்டது. இதனால் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் முழுமையாக தடைப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த மின்வாரிய பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து, தொடர்ந்து பல மணி நேரமாக மின் பாதை மற்றும் மின் சாதனங்களில் ஏற்பட்ட பழுதை நீக்க போராடினர். ஆனால் மின் பழுதை சீரமைக்க முடியவில்லை.

    இதனால் நேற்று இரவு முழுவதும் மின்வியோகம் முழுமையாக தடைபட்டது. இதனால் மக்கள் இரவில் தூங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியே வந்து தவித்தனர்.

    சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள தருணத்தில், நேற்று பகல் 2 மணி முதல் இன்று காலை 9 மணிவரை தொடர்ந்து 19 மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் தடைபட்டுப் போனதால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அரசு பொது தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர். மின் சாதனங்களை இயக்க முடியாமல் போனதால், பல்வேறு வணிகர்களுக்கும் இழப்பு ஏற்பட்டதாக கவலை தெரிவித்தனர்.

    ×